இந்தியாவுக்கு நாடு கடத்துவதை நிறுத்தக்கோரி பயங்கரவாதி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவன் தஹாவூர் ராணா.
பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட, லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தஹாவூர் ராணா, அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
தன்னை நாடு கடத்தக் கூடாது என்ற அவனது கோரிக்கையை ஏற்கெனவே நிராகரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம், நாடு கடத்த உத்தரவிட்டிருந்தது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அதற்கான உத்தரவைப் பிறப்பித்து விட்டார். இந்நிலையில் இறுதி முயற்சியாக, தான் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அங்குச் சித்ரவதை செய்யப்படக்கூடும் என்றும், எனவே அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தான்.
அந்த மனுவையும் அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் தஹாவூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவான் என்பது உறுதியாகி உள்ளது.