உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ சந்திரிகா தேவி கோயில் கடைகளில், பிரசாதம் வாங்க மறுத்த பக்தர்களைக் கடைக்காரர்கள் துரத்திச் சென்று தாக்கியதாக எழுந்த புகாரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திரிவேணி நகரைச் சேர்ந்த பியூஷ் சர்மா என்பவர், தனது குடும்பத்தினருடன் லக்னோ சந்திரிகா தேவி கோயிலுக்குச் சென்றிருந்தார்.
அப்போது, அங்குப் பிரசாதம் விற்கும் கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் இருந்து வாங்குமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே வாக்குவாதம் ஏற்பட்டு, அவரை கடைக்காரர்கள் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.