ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள பழமை வாய்ந்த கங்காதர ஈஸ்வரர் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ பெருவிழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சிறப்பாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.