புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கோயில் திருவிழாவை ஒட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
மிரட்டு நிலை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிறிய மாடு, பெரிய மாடு என 2 பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாடுகள் கலந்துகொண்ட நிலையில், வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.