அவுரங்கசீப்பின் சந்ததியினரைத் தவிர அனைத்து இந்தியர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகாக்கள் திறந்திருக்கும் என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஷாகா எனும் தினசரி பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பாரத் மாதா கி ஜெய் எனச் சொல்லி காவி கொடிக்கு மரியாதை செய்பவர்களுக்கு ஷாகாக்களின் கதவுகள் திறந்திருக்கும் எனக் கூறினார்.
சங்கத்தின் சித்தாந்தத்தில் வழிபாட்டு முறையின் அடிப்படையில் எந்த பாகுபாடும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் சந்ததியினர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களைத் தவிர, அனைத்து இந்தியர்களும் சாதி அல்லது மதத்தைப் பொருட்படுத்தாமல் ஷாகாக்களில் சேர வரவேற்கப்படுகிறார்கள் எனவும் மோகன் பகவத் கூறினார்.