முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் முகேஷ் குமார் சின்கா ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக – கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் கடந்த மாதம் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
தேசிய அணை பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் முகேஷ் குமார் சின்கா அணையில் ஆய்வு மேற்கொண்டார். மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததாகத் தமிழக பொதுப்பணியானர் தகவல் அளித்தனர்.