நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால், திமுக அரசு நடத்தும் நாடகமே அனைத்துக் கட்சி கூட்டம் என விமர்சித்துள்ளார்.
4 ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய எந்த முயற்சியும் எடுக்காததால், தி.மு.க. அரசு மீது மக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ள இபிஎஸ்,
இதை சரிசெய்யவே, சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டியிருப்பதாக தெரிவித்தார்.
இக்கூட்டத்தின் மூலம் எவ்வித தீர்வும் ஏற்படப்போவதில்லை என விமர்சித்துள்ள இபிஎஸ், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.