அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தினர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 2018-ம் ஆண்டு வருமானவரித்துறை சோதனை நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக, கே.என்.நேரு குடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் 2 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நிறைவடைந்ததை தொடர்ந்து, கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் 5 மணி நேர தொடர் விசாரணைக்கு பிறகு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இல்லத்தில் ரவிச்சந்திரனை அதிகாரிகள் காரில் வந்து விட்டுச் சென்றனர். விசாரணையின் போது ரவிச்சந்திரன் அளித்த பதில்கள் வீடியோ பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.