தனது மகனுக்கு மூச்சுக்குழாய் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள பவன் கல்யாண், மகனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஜனசேனா கட்சித் தலைவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர், சிங்கப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகிறார். பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அவரது மகனுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐதராபாத்தில் பவன் கல்யாண் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்த விபத்தானது தன் மகனின் உடல்நிலையில் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். மகனின் உடல்நிலை குறித்து தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த பிரதமர் மோடிக்கு நன்றி கூறிய பவன் கல்யாண், தீ விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.