சென்னையில் 14 வயது சிறுவன் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சி சிசிடிவி வெளியாகியுள்ளது.
சென்னை வடபழனியை சேர்ந்த சாம் என்பவர் தனது 14 வயது மகனிடம் கார் சாவியை கொடுத்துள்ளார். இதையடுத்து அவரது மகன் நண்பருடன் இணைந்து காரை அதிவேகமாக இயக்கியுள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த முதியவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் மீது மோதியது. இதில் அவர்கள் படுகாயமடைந்த நிலையில், சிறுவன் மற்றும் அவரது தந்தை மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.