ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான கொள்கை கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா முதல் நாணயக் கொள்கை முடிவை அறிவித்தார்.
ரிசர்வ் வங்கி 2026-ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு வளர்ச்சி கணிப்பை, முந்தைய மதிப்பீட்டான 6.7 சதவீதத்திலிருந்து 6.5 சதவீதமாக குறைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா மீது விதித்துள்ள 104 சதவீத வரி விதிப்பு, உலக வர்த்தகத்தில் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து அவர் அறிவித்துள்ளதால், வீடு, கார் ஆகியவற்றின் கடன் இ.எம்.ஐ. குறைய வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.