கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகிய இருவர் துடியலூரில் பேக்கரி மற்றும் இனிப்பகம் நடத்தி வந்தனர். இவர்கள் இருவரும் நீண்ட நேரமாகக் கடைக்கு வராததால், ஊழியர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது இருவரும் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், போலீசாரிடம் தகவல் அளித்தனர். இருவரது உடலையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.