திருவண்ணாமலையில் பேனர் கட்டும் பணியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
லோகேஷ் மற்றும் தனுஷ் குமார் ஆகிய 2 இளைஞர்கள், தங்கள் நண்பனின் பிறந்தநாளை ஒட்டி பேனர் வைக்க முயன்றுள்ளனர்.
கயிறு கட்டுவதற்காக மின்மாற்றியில் இருவரும் ஏறியபோது உடம்பில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்த நிலையில், போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.