பழனி கிரிவலப் பாதையில் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கக் கோரி சிறுகுறு வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 2 மாதங்களுக்கு முன் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதையில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன.
இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக வேதனை தெரிவித்த சிறுகுறு வியாபாரிகள், மீண்டும் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.