ராமநாதபுரத்தில் கோயில் கும்பாபிஷேகத்தின் போது, பக்தர்களின் 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் கடந்த 4-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்திய மர்ம நபர்கள் சிலர், பக்தர்கள் அணிந்திருந்த நகைகளைத் திருடிச் சென்றனர். இதுவரை 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.