மதுரை மாவட்டம் நாவினிப்பட்டி ஊராட்சியில் பழுதடைந்த தெரு விளக்குகளைச் சரிசெய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாவினிபட்டியில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் கடந்த 2023ம் ஆண்டு மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. சோலார் மின் இணைப்பு மூலம் அமைக்கப்பட்ட இந்த விளக்குகள் நீண்ட நாட்களாகப் பழுதடைந்து காணப்படுவதால் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
எனவே இவற்றைச் சரிசெய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.