காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தனின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜனுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
இதேபோல் குமரி அனந்தனின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது முதலமைச்சரின் கைகளை பற்றிக்கொண்டு தமிழிசை சௌந்தரராஜன் கதறி அழவே, முதலமைச்சர் அவருக்கு ஆறுதல் கூறினார்.
இதை தொடர்ந்து குமரி அனந்தன் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார். இதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காமராஜரின் கொள்கை வாரிசாக இருந்தவர் குமரி அனந்தன் என்றும், விசிகவை வாழ்த்தி ஊக்கமளித்தவர் எனவும் புகழாரம் சூட்டினார்.
இதேபோல் குமரி அனந்தன் உடலுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மது ஒழிப்புக்காக போராடியவர் குமரிஆனந்தன் என புகழாரம் சூட்டினார்.