பிலிப்பைன்ஸின் கன்லான் எரிமலை வெடித்து, 4,000 மீட்டர் உயரத்திற்குச் சாம்பலை வெளியேற்றி வருகிறது.
அந்நாட்டில் நீக்ரோஸ் தீவில் உள்ள கன்லான் எரிமலை இன்று காலை வெடிக்கத் தொடங்கியது. இதனால் அதிலிருந்து வெளியேறிய சாம்பல் துகள்கள் சுமார் 4 ஆயிரம் மீட்டர் உயரத்திற்கு எழும்பின.
இதன் காரணமாக நீக்ரோஸ் தீவு பகுதியில் உள்ள மக்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.