தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 841 மதுபானங்கள் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது.
இடயிருப்பு மதுபான கடையில் இருந்து கடந்த 2018-ம் ஆண்டு 4 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் 4 பேரை கைது செய்தனர்.
இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் நீதிபதி அப்துல்கனி முன்னிலையில் அழிக்கப்பட்டது.