காஞ்சிபுரம் மாவட்டம், மேவளூர்குப்பம் ஊராட்சியில் 3.75 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், ஊராட்சிமன்ற தலைவரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேவளூர்குப்பம் ஊராட்சிமன்ற தலைவராக உள்ள அபிராமி ராஜேஷ், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்காமல் தனது கணவர் ராஜேஷுடன் சேர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், இதுவரை 3.75 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியருக்குப் புகார்கள் குவிந்தன.
இது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்கக்கோரி ஊராட்சிமன்ற தலைவர் அபிராமி ராஜேஷுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.