டாஸ்மாக் ஊழலை மறைக்கவே அனைத்துக் கட்சி கூட்டம் எனும் நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றுவதாக மத்திய அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.
உதகையில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாகத் தெரிவித்தார்.
திமுக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களை ஏமாற்றி வருவதாகக் கூறிய எல். முருகன், டாஸ்மாக் ஊழலை மறைக்கவே அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், திமுகவுக்குத் தக்க சமயத்தில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறினார்.