பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைக்க முடியும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நவ்கர் மகாமந்திர திவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. சமண மதம் சார்ந்த இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சமண மதம் நம்மை நாமே வெல்ல ஊக்குவிக்கிறது எனக் கூறினார்.
குஜராத்தின் ஒவ்வொரு தெருக்களிலும் சமண மதத்தின் செல்வாக்கு எவ்வாறு இருந்தது என்பதை நான் அறிவேன் எனக்கூறிய பிரதமர் மோடி, பண்டைய பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், பழங்காலத்தை நவீனத்துவத்துடன் நாம் இணைக்க முடியும் எனத் தெரிவித்தார்.