கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கிணற்றில் தவறி விழுந்த 2 யானைகளை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர்.
குண்டலம் கிராமத்தில் விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள், பயிர்களை சேதப்படுத்தி வந்தன. தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர்.
அப்போது விவசாய கிணற்றில் ஒரு ஆண் யானை மற்றும் குட்டி யானை தவறி விழுந்தது. இதையடுத்து ஜேசிபி உதவியுடன் நீண்ட நேரம் போராடி 2 யானைகளையும் வனத்துறையினர் மீட்டனர்.