கோவை சின்னதடாகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த செல்வராஜ், ஆம்னி வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பன்னிமடையில் இருந்து தடாகம் நோக்கி வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
வரப்பாளையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன், சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் செல்வராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.