அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு தொடர்பாகத் தலைவர்களின் உருவத்தை எடிட் செய்து உருவான ஏஐ வீடியோ வைரலாகி வருகிறது.
அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளின் பொருள்களுக்கு, அமெரிக்காவும் அதே அளவுக்கு வரி விதிக்கும் நடைமுறை கடந்த 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
அதன்படி இந்தியப் பொருள்களுக்கு 26 சதவீதமும், சீனாவுக்கு 34 சதவீதமும், வியட்நாம் பொருள்களுக்கு 46 சதவீதமும், ஜப்பானுக்கு 24 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பைக் குறித்தும் தலைவர்களின் உருவத்தை எடிட் செய்தும் ஏஐ வீடியோ வெளியாகியுள்ளது.