சேலம் கருப்பூர் மேம்பாலத்தை ஒட்டிய பள்ளத்தில், மருத்துவ கழிவுகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்ததால் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட மரங்கள் கருகிச் சேதமடைந்தன.
கருப்பூர் மேம்பாலத்தை ஒட்டிய பகுதியில் பசுமை காப்போம் திட்டத்தின் கீழ் அதிகளவு மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் மேம்பாலத்தை ஒட்டிய பள்ளத்தில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதை ஒரு கும்பல் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பலர் புகாரளித்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே மருத்துவ கழிவுகளைக் கொட்டிய கும்பல், யாரும் பார்க்காத வேளையில் அவற்றுக்கு தீ வைத்தன.
இதனால் அருகிலுள்ள 10-க்கும் மேற்பட்ட மரங்கள் கருகின. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை, சம்பவ இடத்திற்குச் சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.