நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படம் மே 16-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே மாதம் 16-ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இது குறித்த பதிவைச் சந்தானம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.