அமெரிக்க பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் காதலனை கரம் பிடிப்பதற்காக இந்தியாவுக்குப் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஜாக்லின் ஃபோரோ என்பவர், ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சந்தன் என்பவருக்கு இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளார்.
பின்னர் இந்த ஜோடி 14 மாதங்களாக இன்ஸ்டாகிராம் வழியே ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இந்நிலையில் தனது காதலனை கரம் பிடிப்பதற்காக ஜாக்லின் ஃபோரா தனது தாயுடன் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.