அமெரிக்காவில் இருந்து தீவிரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட தஹாவூர் ராணா, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதை எதிர்த்து ராணா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் தஹாவூர் ராணாவை அமெரிக்காவிலிருந்து அழைத்துவர இந்தியக் குழு வாஷிங்டன்னுக்கு சென்றுள்ளது.