வங்கதேசத்திடமிருந்து கப்பல் போக்குவரத்து உரிமையை இந்தியா திரும்பப் பெற்றது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில், வங்கதேசம் தனது ஏற்றுமதி சரக்குகளை மூன்றாம் நாடுகளுக்கு, இந்தியாவில் உள்ள சுங்க நிலையங்கள் வழியாக, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு கொண்டு செல்ல அனுமதித்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக பூடான், நேபாளம், மியான்மர் உடனான வங்கதேசத்தின் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.