அடுத்து அமையப்போகும் திமுக அல்லாத புதிய அரசுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகுதான் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்திலிருந்து செல்வார் என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,ஆளுநரை மாற்ற வேண்டும் என திமுக தொடர்ந்து கூறி வருவதாகவும், ஆனால் தமிழக மக்கள் திமுக அரசை மாற்றப்போவதாகவும் கூறினார்.
2026ஆம் ஆண்டில் தமிழகத்தில் திமுக அல்லாத புதிய அரசு அமையும் என அவர் தெரிவித்தார்.
புதிய அரசுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த பிறகுதான் ஆளுநர் செல்வார் என்றும்,பண பலத்தை காட்டி தேர்தலில் வெற்றி பெறலாம் என திமுக நினைப்பது பலிக்காது என்றும் ராம சீனிவாசன் கூறினார்.