அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடி தந்த சீனாவை தவிர்த்து, 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வரியை உயர்த்தினார். சீனா இந்த வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரியை உயர்த்தியது.
இதனால், சீனாவுக்கான வரியை, நேற்று முன்தினம் 104 சதவீதமாக உயர்த்தினார். இதனைதொடர்ந்து சீனாவும் அமெரிக்காவுக்கான வரியை 84 சதவீதமாக உயர்த்தியது. இந்த நிலையில், சீனாவை தவிர இந்தியா உட்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விதிப்பை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.