திருச்சி மாவட்டம் லால்குடி சப்தரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
லால்குடியில் அமைந்துள்ள சப்தரீசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய சுவாமி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிலையில், சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.