முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் நேர்மை, அச்சமின்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் உள்ளிட்ட யாரும் , சட்டத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கக்கூடாது” என்று தேசாய் ஜி உறுதியாக நம்பியதாக தெரிவித்துள்ளார்.
அவரைப் பொறுத்தவரை, உண்மை என்பது வெறும் நடைமுறை அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை எனறும் தெரிவித்தார்.
அவரது தூய்மையான நிர்வாகம் மற்றும் அர்ப்பணிப்புள்ள தேசிய சேவை ஆகியவற்றின் மரபு அனைத்து இந்தியர்களுக்கும் உத்வேகத்தின் ஆதாரமாகத் தொடர்வதாக எல். முருகன் கூறியுள்ளார்.