தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் காவல்துறை வாகனத்தில் ரீல்ஸ் எடுத்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் எஸ்.ஐ.யின் உறவினர் என்பது தெரியவந்தது. அரசு வாகனத்தைத் தவறாகப் பயன்படுத்தியது குறித்து நடவடிக்கை எடுக்கக்கூறி அதிகாரிகள் உத்தரவின் பேரில் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.