போலி கால்சென்டர் நடத்தி பல மாநில இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்ட ஹரியானாவைச் சேர்ந்த இருவரைப் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த சிவனேஷ், வேலைக்காகப் பல இணையதளங்களில் பதிவு செய்திருந்தார். அவரை அணுகிய சிலர், பிரபல நிறுவனத்தில் பணி இருப்பதாகக் கூறி, 1 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சிவனேஷ் புகாரளித்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட ஹரியானாவைச் சேர்ந்த பர்வீன், கவுரவ் ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.