புதுச்சேரியில் நண்பருடன் செல்போனில் பேசியதைத் தந்தை கண்டித்ததால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேதராப்பட்டு முத்தமிழ் நகரைச் சேர்ந்த இளையராஜாவுக்கு ஜெயஸ்ரீ என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது ஜெயஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜெயஸ்ரீ தன்னுடன் படிக்கும் சக மாணவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும், இதனை அவரது தந்தை கண்டித்ததால் மனமுடைந்து தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது.