ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அம்மாநில காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநில காவல்துறையினர் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு வருவதாகவும், தாம் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது பாரபட்சத்துடன் செயல்படும் காவல் அதிகாரிகள் தூக்கி எறியப்படுவார்கள் என ஆவேசமாகத் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் காவல் ஆய்வாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், சீருடை அணிந்து நியாயமாகச் செயல்பட்டு வருவதாகவும், காவல்துறையினர் குறித்த தறவான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.