திமுக தொண்டன் இலவு காத்த கிளியாகத் தான் இருக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் வரும் 19ம் தேதி பாஜக சேலம் கோட்ட மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதற்கான பூமி பூஜை, கால் கோள் விழா பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. ராமலிங்கம், “துணைவேந்தர் நியமனம் மூலம் லஞ்சம் வாங்கலாம் என்ற கொண்டாட்டத்தில் திமுக உள்ளது” என விமர்சித்தார்.