திருவண்ணாமலை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் நகர்மன்ற தலைவரிடம் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.
திமுக நகர்மன்ற தலைவர் நிர்மலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக, திமுகவைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது தங்கள் பகுதியில் பொதுமக்களுக்கு எவ்வித வசதிகளும் செய்து தரப்படவில்லை எனக்கூறி அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாகக் கழிவுநீர் கால்வாய் வசதி, பாதாளச் சாக்கடை ஆகியவை அமைத்துத் தரப்படவில்லை எனக் குற்றம் சாட்டினர்.