வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!
Oct 8, 2026, 09:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 10, 2025, 01:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டியன் ஆறுமுகம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது 2004ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சேலம் நீதிமன்றம், அனைவரையும் விடுவித்து கடந்த 2006ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது 2012 ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்தார்.

இதனை அடுத்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்றவர்களை விடுவித்தது சரி எனக்கூறி, அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி, மகள், மகன், மருமகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது தவறு எனக் கூறி, சேலம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, சாட்சி விசாரணையை துவங்கும்படி சேலம் நீதிமன்றத்துக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Tags: Veerapandi Arumugam disproportionate assets case.madras high courtDMK regimeAnti-Corruption BureauVeerapandi Arumugam
Share
Tweet
SendShare
Previous Post

Game of Thrones திகில் ஓநாய் : நிஜத்தில் கொண்டு வந்த விஞ்ஞானிகள்!

Next Post

திருவண்ணாமலை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் சலசலப்பு!

Related News

மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் யாருக்கு வெற்றி – நாளை வாக்கு எண்ணிக்கை!

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர்; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

Load More

அண்மைச் செய்திகள்

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி – டிசம்பருக்குள் அறிமுகம்!

தனியார் பேருந்து சேவை பாதிக்காத வகையில் வெற்றி பயண பேருந்து நேரத்தை மாற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை!

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 7 பேருக்கு தொடர்பு – என்ஐஏ விசாரணையில் அம்பலம்!

டெல்லி போராட்டத்தில் காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு – ராகுல், பிரியங்கா மீது வழக்குப்பதிவு!

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies