மறைந்த முதுபெரும் தலைவர் குமரி அனந்தனின் படத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
அகில் இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் தனது 93-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சென்னை வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அங்கு வைக்கப்பட்டுள்ள குமரி அனந்தனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தந்தையை இழந்து வாடும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் குடும்பத்தாருக்கு அண்ணாமலை ஆறுதல் கூறினார்.