புதுச்சேரியில் போக்குவரத்துக் கழக ஒப்பந்த ஊழியர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகம் சார்பில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சாலை போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியாற்றி வரும் நிலையில், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2வது நாளாக அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.