உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆளுநருக்குப் பின்னடைவு இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
நடந்து நடந்து தமிழகத்தில் ஒரு கட்சியை வளர்த்து இருக்கிறார் என்றால் அந்த புகழ் அனைத்தும் குமரி அனந்தனையே சாரும் என்றும் குமரி அனந்தன் வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டியது, சித்தாந்தத்தை மறந்து அனைவரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர் என அண்ணாமலை தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவது உறுதி, எதற்கு வருகிறார் என்பது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம் என அண்ணாமலை தெரிவித்தார்.
அமித்ஷா அவர்களுக்கும் வருகைக்கும் மாநிலத் தலைவர் மாற்றம் நிகழ்விற்கும் எந்த சம்பந்தம் இல்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆளுநருக்குப் பின்னடைவு இல்லை என்றும் நடுத்தர, பின் தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு நல்லதைத் தான் செய்கிறது என அண்ணாமலை தெரிவித்தார்.