சென்னை சாலிகிராமம் இல்லத்தில் உள்ள குமரி அனந்தன் படத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில். தேசத்தின் சுதந்திரப் போராட்டக் காலங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி போராடியதோடு, தமிழக அரசியல் களத்தில் நின்று எப்போதும் மக்கள் பணி செய்தவர் அய்யா குமரி அனந்தன் என தெரிவித்துள்ளார்.
வாழ்ந்த காலம் வரை தமிழ் மொழியின் மீது தீரா பற்று கொண்டிருந்த ஐயாவை இழந்து வாடும் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததாக கூறியுள்ளார்.