திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் முதியவரை வழிமறித்து பணத்தை பறித்து சென்ற 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாநகர் காந்தி மார்க்கெட் அனைத்து நேரங்களிலும் பரபரப்பாக காணப்படும் நிலையில், அந்த வழியாக முதியவர் ஒருவர் நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து 3 இளைஞர்கள் வந்தனர்.
ஒரு கட்டத்தில் முதியவரின் கைகளை 2 இளைஞர்கள் பிடித்து கொண்ட நிலையில், மற்றொருவர் முதியவரின் சட்டப்பையில் இருந்த பணத்தை பறித்தார். அதனை தொடர்ந்து 3 பேரும் தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், முதியவரிடம் பணம் பறித்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.