பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருநந்திக்கு பால், தயிர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பங்குனி மாதத்தின் 2-வது பிரதோஷத்தையொட்டி பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட நந்தியம் பெருமானுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மஞ்சள், விபூதி, குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து, மலர் மாலைகள் சாற்றப்பட்டு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.