பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திர தினமான இன்றைய அற்புதமான நாளில், நாட்டு மக்கள் அனைவரது வேண்டுதல்கள் நிறைவேறவும், ஆரோக்கியமும், மகிழ்வும் பெற்றிருக்க எல்லாம் வல்ல தெய்வமான முருகப்பெருமானிடம் வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.