திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைப் பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர்.
திருவண்ணாமலை குமரக்கோவில் தெருவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் குமார் மற்றும் மீனாட்சி, சண்முகம், குடும்பத்தினர் அண்ணாமலையாரின் தீவிர பக்தர்களான இவர்கள், 50 லட்சம் மதிப்பீட்டில் 750 கிராம் எடைக்கொண்ட தங்க நகைகளை அண்ணாமலையார் கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கினர்.
இதனை அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி மற்றும் ஆலய இணை ஆணையர் பரணிதரன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.