திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக வனத்துறை அமைச்சரான பொன்முடி அண்மையில் கட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றுப் பேசியபோது, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மிகக் கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தார்.
அவரின் இந்த பேச்சுக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தன. திமுக எம்.பி கனிமொழியும் அமைச்சர் பொன்முடியின் பேச்சு கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி கட்சி பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.